பெட்டாலிங் ஜெயா, டிச 29- மலேசிய சூப்பர் லீக் காற்பந்து போட்டியின் ஆட்டத்தில் சிலாங்கூர் எஃப் சி அணி மலாக்கா எஃப் சி அணியை 3-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது.
இந்த வெற்றியின் மூலம் சிலாங்கூர் எஃப் சி அணி சூப்பர் லீக் புள்ளிப்பட்டியலில் மூன்றாவது இடத்திற்கு முன்னேறியது.
பெட்டாலிங் ஜெயா மாநகர் மன்றத்தின் காற்பந்து அரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் சிலாங்கூர் அணியின் முதல் கோலை மத்திய திடல் ஆட்டக்காரர் அல்- ரவாப்டெ புகுத்தினார்.
பின்னர், அல்வின் ஃபோர்டெஸ் மற்றும் மொராஸ் இரு ஆட்டக்காரர்கள் முறையே இரண்டாவது மற்றும் மூன்றாவது கோல்களைப் புகுத்தி சிலாங்கூர் எஃப் சி அணியின் வெற்றியை உறுதி செய்தனர்.


