லண்டன், டிச 29- இங்கிலீஷ் பிரிமியர் லீக் ஆட்டத்தில் முன்னணி அணியான செல்சி அணியை அதன் சொந்த அரங்கில் அஸ்டன் வில்லா அணி 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது.
ஒல்லி வாட்கின்ஸ் மூலம் அஸ்டன் வில்லா இரு கோல்களைப் பெற்றது. இந்ந வெற்றியைத் தொடர்ந்து அஸ்டன் வில்லா தொடர்ந்து தனது 11ஆவது லீக் ஆட்டத்தின் வெற்றியைப் பதிவு செய்தது.
இங்கிலீஷ் பிரிமியர் லீக் புள்ளிப்பட்டியலில் அஸ்டன் வில்லா அணி 39 புள்ளிகளுடன் உள்ள நிலையில் அர்சனல் அணி 42 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளது.
மற்றொரு ஆட்டங்களில் லிவர்புல் அணி வொல்வ்ஸ் அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது. அதேபோல் மென்செஸ்டர் யுனைடெட், அர்சனல் ஆகிய அணிகள் தத்தம் ஆட்டங்களில் வெற்றிப்பெற்றன.


