ஷா ஆலம், டிச 26: எதிர்வரவிருக்கும் சீனப் புத்தாண்டை முன்னிட்டு ஜனவரி 5 முதல் ஜோம் ஷோப்பிங் வவுச்சருக்கு விண்ணப்பிக்க பந்திங் சமூக சேவை மையம் அதன் குடியிருப்பாளர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது.
இந்த வவுச்சர்கள் SMUE அல்லது SMIS திட்டம் உறுப்பினர்கள் அல்லாதவர்களுக்கும், மாதாந்திர குடும்ப வருமானம் RM3,000க்கும் குறைவாக உள்ளவர்களுக்கு, சீன புத்தாண்டை கொண்டாடுபவர்களுக்கு மட்டுமே வழங்கப்படும். மேலும், விண்ணப்பாளர்கள் கட்டாயம் பந்திங் சட்டமன்றத் தொகுதி வாக்காளர்களாக இருக்க வேண்டும்.
“வவுச்சர்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதால், முதலில் வரும் நபர்களுக்கே வாய்ப்பு வழங்கப்படும். தகுதி உள்ளவர்கள் விண்ணப்பப் படிவத்தைப் பெற சமூக சேவை மையத்திற்கு வரலாம்.
இந்த திட்டம், பண்டிக்கை காலங்களில் முன் ஏற்பாடுகளை மேற்கொள்ளும் போது குறைந்த வருமானம் பெறும் மக்களின் சுமையைக் குறைக்க உதவுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்த செயல்முறையை எளிதாக்குவதற்காக, முழுமையாக நிரப்பப்பட்ட படிவத்தையும் தேவையான ஆவணங்களின் நகல்களையும் சேர்த்து சமர்ப்பிக்க வேண்டும்.


