அடுத்தாண்டு முதல் சிறு குப்பையை வீசினால் கூட RM2,000 அபராதம், சமூக சேவை உத்தரவு விதிக்கப்படலாம்

26 டிசம்பர் 2025, 7:36 AM
அடுத்தாண்டு முதல் சிறு குப்பையை வீசினால் கூட RM2,000 அபராதம், சமூக சேவை உத்தரவு விதிக்கப்படலாம்
அடுத்தாண்டு முதல் சிறு குப்பையை வீசினால் கூட RM2,000 அபராதம், சமூக சேவை உத்தரவு விதிக்கப்படலாம்

ஷா ஆலம், டிச 26 – அடுத்தாண்டு ஜனவரி 1 முதல், பொதுத் தளங்களில் சிறிய அளவிலான குப்பைகளை வீசும் நபர்கள் கூட RM2,000 வரை அபராதம் மற்றும் ஆறு மாத காலத்திற்குள் அதிகபட்சம் 12 மணி நேர சமூக சேவை உத்தரவை எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்படும்.

சிலரின் பொறுப்பற்ற செயல்களால் நகரங்களின் தூய்மை நிலை தொடர்ந்து மோசமடைந்து வருகிறது. அதனால், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வீடமைப்பு மற்றும் ஊராட்சித்துறை அமைச்சர் ஙா கோர் மிங் தெரிவித்தார்.

“நகர மையங்கள் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில், சிலர் குப்பை வீசுவதால் நகரங்களின் தூய்மை நிலை பாதிக்கப்படுவது குறித்து வந்துள்ள அறிக்கைகளை நான் மிகக் கடுமையாகக் கருதுகிறேன்,`` என்றார்

“இது நமது கலாச்சாரமா? மலேசியா வளர்ந்த நாடாக முன்னேறி வருவதோடு, ``Visit Malaysia Year 2026`` நிகழ்வை வரவேற்க தயாராகி வருகிறது. ஆனால், இத்தகைய பொறுப்பற்ற நடத்தை நகரங்களின் புகழையும் நாட்டின் நற்பெயரையும் களங்கப்படுத்துகிறது,” என்று அவர் அறிக்கையில் தெரிவித்தார்.

மேலும், திடக் கழிவு மேலாண்மை மற்றும் பொது சுத்தம் கழகம் (SWCorp), ஊராட்சி மன்றங்கள் (பிபிடி) மூலம் அரசு தொடர்ந்து சுத்தம் மற்றும் அமலாக்க நடவடிக்கைகளை மேற்கொண்டு, நகரங்களை தூய்மையாகவும் முறையாகவும் வைத்திருக்க முயற்சி செய்து வருவதாக அவர் விளக்கினார்.

ஆனால், பொதுமக்களின் ஒத்துழைப்பு இல்லையெனில் இந்த முயற்சிகள் முழுமையான பலனை அளிக்காது என்றும் கோர் மிங் சுட்டிக்காட்டினார்.

“நகர தூய்மை என்பது அரசு, SWCorp அல்லது பிபிடி ஆகியவற்றின் பொறுப்பு மட்டுமல்ல. அது முழு சமூகத்தின் கூட்டு பொறுப்பாகும்,” என்று அவர் வலியுறுத்தினார்.

அடுத்த ஆண்டு முதல் கடுமையான அமலாக்கம் மேற்கொள்ளப்படுவது, மக்களிடையே ஒழுக்கம், பொதுத் தளங்களை மதிக்கும் மனப்பான்மை மற்றும் சுற்றுச்சூழல் தூய்மையை பாதுகாப்பதற்கான விழிப்புணர்வை வளர்ப்பதற்காகவே என்றும் அவர் தெரிவித்தார்.

“தூய்மையான நகரம் உயர்ந்த பண்பாட்டைக் கொண்ட சமூகத்தை பிரதிபலிக்கிறது. வருங்கால தலைமுறைகளுக்காக தூய்மையை பாதுகாக்க SWCorp மற்றும் பிபிடி மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு நாம் அனைவரும் ஒன்றிணைந்து ஆதரவு அளிப்போம்,” என்று அவர் கூறினார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.