லாஸ் ஏஞ்சலஸ், டிச 26 - தென் கலிபோர்னியாவில் தொடர் கனமழை பெய்து வருவதால், திடீர் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன.
கிறிஸ்துமஸ் புயல்கள் தொடர்ந்து மாநிலத்தைத் தாக்கி வருகின்ற நிலையில் வெள்ளிக்கிழமை வரை கனமழை பெய்வதோடு பலத்த காற்றும் வீசக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
ஹவாயிலிருந்து அமெரிக்காவின் மேற்கு கடற்கரைக்கு அதிக ஈரப்பதத்தைக் கொண்டு செல்லும் "பைனாப்பிள் எக்ஸ்பிரஸ்" எனப்படும் வளிமண்டல நதி நிகழ்வே இந்தப் பேரழிவுக்குக் காரணம் ஆகும்.
இந்தப் புயல் கலிபோர்னியாவிற்கு சில நாட்களில் பல மாதங்கள் பெய்யக்கூடிய மழையைக் கொண்டுவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கலிபோர்னியாவில் பரவலாக ஈரப்பதத்தை உருவாக்கும் கனமழை பெய்யும் மற்றும் சில பகுதிகளில் மணிக்கு 89 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
மேலும், லாஸ் ஏஞ்சலஸ் உட்பட பல மாவட்டங்களில் அவசரகால நிலையை மாநில அதிகாரிகள் அறிவித்தனர்.


