கோலாலம்பூர், டிச 26- தலைநகரின் புக்கிட் பிந்தாங் பகுதியில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்திற்குப் பிறகு ஏற்பட்ட அதிகமான குப்பைகள் காரணமாக நாட்டின் வீடமைப்பு, ஊராட்சித்துறை அமைச்சர் ஙா கோர் மிங் கடும் எச்சரிக்கையை விடுத்தார்.
குறிப்பாக, புக்கிட் பிந்தாங் பகுதியில் குப்பைகள் ஆங்காங்கே வீசப்பட்டதாக கூறப்படும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலானதைத் தொடர்ந்து அமைச்சர் இந்த எச்சரிக்கையை விடுத்தார்.
மலேசியாவின் தலைநகரில் இதுபோன்ற சம்பவம் ஒன்று அரங்கேறியிருப்பது என்பது வெட்கப்பட வேண்டிய விஷயமாகும் என்று அமைச்சர் கருத்துரைத்தார்.
இந்நிலையில், திறந்தவெளி இடங்களில் கழிவுகளைச் சரியான தொட்டிகளிலும் மறுசுழற்சி பையில் போட்டுச் செல்லுமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.
குப்பைகளை துப்புரவுப்படுத்தும் பணிகள் முழுவீச்சில் நடந்து வருவதாகவும் அமைச்சர் சொன்னார்.


