2025 மாற்றுத்திறனாளி இளைஞர்களுக்கான தலைமைத்துவ நிகழ்ச்சி - யானிஸ்

24 டிசம்பர் 2025, 9:48 AM
2025 மாற்றுத்திறனாளி இளைஞர்களுக்கான தலைமைத்துவ நிகழ்ச்சி - யானிஸ்

ஷா ஆலம், டிச 24 - Independent Living Support Centre (ILSC) திட்டத்தின் கீழ் நடத்தப்படும் 2025 மாற்றுத்திறனாளி இளைஞர்களுக்கான தலைமைத்துவ நிகழ்ச்சியின் மூலம் அவர்களை எதிர்காலத் தலைவர்களாக உருவாக்கும் முயற்சியை சிலாங்கூர் சிறப்பு தேவை கொண்டவர்களுக்கான அறக்கட்டளை (Yayasan Insan Istimewa Selangor – Yanis) தொடர்கிறது.

57 ILSC முன்னாள் உறுப்பினர்களாக இருந்த மாற்றுத்திறனாளி இளைஞர்களை ஒருங்கிணைத்த இந்த நிகழ்ச்சி, தன்னம்பிக்கையையும் தலைமைத்துவ திறன்களையும் வளர்க்கும் முக்கிய தளமாக அமைந்துள்ளது என யானிஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி கமருல் ஹிஷாம் யோப் ஹாஷிம் கூறினார்.

மேலும், மாற்றுத்திறனாளிகள் தங்களின் வெற்றிக் கதைகளை பகிர்வதால், அது கோட்பாடுகளை விட பலமான கருத்தினை அளிக்கிறது என அவர் விளக்கினார்.

மாற்றுத்திறனாளி இளைஞர்கள் சுயமாக வாழ்க்கை நடத்த உதவும் பயிற்சி, ஆதரவு மற்றும் வாய்ப்புகளை வழங்கும் பணியில் தொடர்ந்து உறுதியாக யானிஸ் செயல்பட்டு வருகிறது.

“ஒவ்வொரு முயற்சியும், பிரார்த்தனையும் வீண் போகவில்லை; ஏனெனில் சரியான ஆதரவைப் பெற்ற மாற்றுத்திறனாளி குழந்தைகளிடம் பெரிய திறன் இருக்கிறது,” என்று அவர் கூறினார்.

இந்நிகழ்ச்சியில், ILSC முன்னாள் உறுப்பினர்கள் நால்வர் தங்களின் வெற்றிக் கதைகளை பகிர்ந்தனர்.

இந்த பகிர்வுகள், உடல் குறைபாடுகள் கனவுகளை அடைய தடையல்ல, போட்டித்திறன் வாய்ந்த நபராக உருவெடுக்க முடியும் என்று சான்றளிக்கிறது.

மேலும், யானிஸ் ஏற்பாடு செய்த ILSC திட்டம், மாற்றுத்திறனாளி இளைஞர்களின் நற்பண்பும் மன உறுதியும் வளர்க்க, ஆதரவு வழங்கும் மேடையாக செயல்படுகிறது.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.