ஷா ஆலாம், டிச 24- உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் எனது மனமார்ந்த கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள். இந்த மகிழ்ச்சியான பண்டிகையை குடும்பத்துடன் கொண்டாடுங்கள் என்று கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினர் மாண்புமிகு பிரகாஷ் சம்புநாதன் தனது கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டார்.

இந்த இனிய திருநாள் உங்கள் வாழ்வில் மகிழ்ச்சியும், அமைதியையும், நற்பேறுகளையும் வாரி வழங்கட்டும்.
கிறிஸ்துமஸ் என்பது வெறும் மத ரீதியான விழா மட்டுமல்லாமல், மனிதநேயம் மற்றும் பகிர்ந்தளித்தலின் அடையாளமாகப் பார்க்கப்படுகிறது.
2025-ஆம் ஆண்டில், போர் மற்றும் பொருளாதாரச் சவால்களுக்கு மத்தியிலும், மக்கள் ஒருவருக்கொருவர் அன்பு, நன்றியுணர்வுடன் கிறிஸ்துமஸ் பண்டிகையைக் கொண்டாட வேண்டுகிறேன் என பிரகாஷ் கேட்டுக்கொண்டார்.


