பென்சில்வேனியா, டிச 24 - நேற்று பென்சில்வேனியாவில் உள்ள முதியோர் இல்லம் ஒன்றில் வெடிப்புச் சம்பவம் ஏற்பட்டது.
இச்சம்பவத்தில் அந்த இல்லத்தின் ஒரு பகுதி முற்றாக அழிந்த வேளையில் குறைந்தது இருவர் மரணமடைந்தனர் என தகவல் வெளியிடப்பட்டது.
இதற்கிடையில், இந்த வெடிப்பு சம்பவம் எரிவாயு கசிவினால் நிகழ்ந்திருக்கக்கூடும் என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.
அந்த பராமரிப்பு கட்டிட கீழ் தளத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்த நிலையில், பலர் அதன் இடிபாடுகளில் சிக்கிக் கொண்டனர். அவர்களை தேடி மீட்கும் பணியில் மீட்புப் படையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
பெர்னாமா


