ஷா ஆலம், டிச 24 : மேன்மை தங்கிய சிலாங்கூர் சுல்தான் ஷராபுடின் இட்ரிஸ் ஷா அல்ஹாஜ் மற்றும் தெங்கு பெர்மைசூரி ஹாஜா நோராஷிகின் இருவரும் அனைத்து கிறிஸ்தவர்களுக்கும், குறிப்பாக சிலாங்கூரில் வசிப்பவர்களுக்கு இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.
இந்தப் பண்டிகை குடும்பத்தினரும் சுற்றியுள்ள சமூகத்தினருமுடனும் மகிழ்ச்சி, வளமை மற்றும் நன்றியுணர்வு நிறைந்த சூழலில் கொண்டாடப்பட வேண்டும் என்று அவர்கள் தெரிவித்தனர்.
இந்த நாட்டில் பல இன சமூகத்தின் நல்லிணக்கத்தைப் பாதுகாக்க, இக்கொண்டாட்டத்தின் மூலம் வெளிப்படுத்தப்படும் அன்பு, சகிப்புத்தன்மை மற்றும் பரஸ்பர மரியாதை ஆகியவற்றின் மதிப்புகள் தொடர்ந்து வலுப்படுத்தப்படும் என்றும் சுல்தான் ஷராபுடின் பதிவில் குறிப்பிட்டார்.
“இந்த கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தின் மூலம் வெளிப்படும் அன்பும் பரஸ்பர மரியாதையும், நாட்டின் பல இன சமூகங்களுக்கிடையேயான ஒற்றுமையையும் நல்லிணக்கத்தையும் மேலும் உறுதிப்படுத்தும்,`` என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.


