ஷா ஆலாம், டிச 24- கிறிஸ்துமஸ் பெருநாளை முன்னிட்டு சிலாங்கூர் மாநிலத்தைச் சேர்ந்த அனைத்து கிறிஸ்தவ பெருமக்களுக்கும் நல்வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
இந்த மகிழ்ச்சிகரமான தருணத்தில், ஒவ்வொரு குடும்பத்திலும் அமைதி, மகிழ்ச்சி மற்றும் அன்பு பெருகிட வேண்டும் என சிலாங்கூர் மாநில மனித வளம், மற்றும் வறுமை ஒழிப்பு ஆட்சிக்குழு உறுப்பினர் மாண்புமிகு பாப்பா ராய்டு வீரமான் கூறினார்.
அடுத்ததாக பிறக்கவிருக்கும் புத்தாண்டை வரவேற்கும் வேளையில், மக்களிடையே ஒற்றுமை, நல்லிணக்கம் மற்றும் ஒன்றிணைந்து செயல்படும் பண்பை மேலும் வலுப்படுத்த வேண்டியதன் அவசியத்தை இச்செய்தி வலியுறுத்துகிறது.
அனைவரையும் உள்ளடக்கிய, வளமான மற்றும் அக்கறையுள்ள ஒரு சிலாங்கூர் மாநிலத்தை உருவாக்குவதற்கு அனைவரும் ஒன்றிணைந்து பாடுபட வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.

முன்னதாக, கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு வாழ்த்துகளை பாப்பா ராய்டு வீரமான் தனது முகநூல் வாயிலாக கேட்டுக் கொண்டிருந்தார்.


