ஷா ஆலம், டிச 23 - பிங்காஸ் (BINGKAS) பெறுநர்களில் குறைந்தது 20 சதவீதம் பேர் பிங்காஸ் பிளஸ் திட்டத்தின் மூலம் வறுமை பிடியிலிருந்து மீள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இத்திட்டத்தில் மாதம் RM300 என 18 மாதங்கள் உதவி பெறுபவர்களுக்கு வருமானம் ஈட்டும் திறனை மேம்படுத்த பொருத்தமான பயிற்சி திட்டமும் வழங்கப்படுவதாக சமூக நலன் ஆட்சிக்குழு உறுப்பினர் தெரிவித்தார்.
திறன் மேம்பாடு மூலம் நீண்டகாலப் பண உதவியைச் சார்ந்திருப்பதைக் குறைப்பதற்கான ஒரு வழியாக பிங்காஸ் பிளஸ் வடிவமைக்கப்பட்டதாக அன்பால் சாரி கூறினார்.
"அவர்கள் தங்கள் சொந்த வருமானத்தை ஈட்டக்கூடிய வகையில் புதிய திறன்கள் மூலம் சுயமாக இயங்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்.
வறுமையை ஒழிப்பதில் உள்ள முக்கிய சவால், வேலை செய்வதில் ஆர்வம் காட்டாமல் பல்வேறு உதவிகளைப் பெறும் ஒரு சிலரின் மனநிலையை மாற்றுவதாகும் என அவர் மீடியா சிலாங்கூரிடம் தெரிவித்தார்.
"சிலர் ஜே.கே.எம் (சமூக நலத்துறை), சாகாட் மற்றும் பிங்காஸ் ஆகியவற்றிலிருந்து மாதத்திற்கு RM2,000 வரை உதவி பெற்றுள்ளனர். அவர்கள் வேலை செய்யத் தேவையில்லை என்று கூறுகின்றனர். இந்தச் சுழற்சி நிறுத்தப்பட வேண்டும்.
"குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு உதவி செய்வது மட்டுமல்லாமல், அவர்கள் வறுமைச் சுழற்சியிலிருந்து வெளியேறி, வளமான வாழ்க்கையை வாழ வேண்டும் என்றும் நாங்கள் விரும்புகிறோம்," என அவர் விளக்கினார்.
கூடுதலாக, மாமாகெர்ஜா திட்டத்தின் லம் ஆறு வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கான RM100 குழந்தை பராமரிப்பு மானியம் செலவுகளைக் குறைத்து, பணியிடத்தில் பெண்களின் பங்களிப்பை அதிகரிக்கிறது என்று அன்ஃபால் கூறினார்.


