கோலாலம்பூர், டிச 23- சீனா நாட்டைச் சேர்ந்த பெண்மணி ஒருவர் கடந்த ஓராண்டாகக் கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் வாழ்ந்து வருவது குறித்து சமூக ஊடகங்களில் காணொளி ஒன்று வைரலாகியுள்ளது.
த்ரெட்ஸ் பயனர் ஒருவர் இந்த காணொளியைப் பகிர்ந்துள்ள நிலையில் சம்பந்தப்பட்ட பெண்மணி அங்கேயே தங்கி உணவருந்தி, உறங்கி வருவதாகவும் சொல்லப்படுகிறது.
வெளிநாட்டு பெண்மணி ஒருவர் கே.எல்.ஐ.ஏவில் ஓராண்டாக தங்கி வருவது குறித்து குடிநுழைவு துறை அதிகாரிகள், விமான நிலைய அதிகாரிகள் யாரும் கண்டுக்கொள்ளவில்லையா என்று நெட்டிசன்கள் கேள்விகளைக் கேட்டுள்ளனர்.
இருப்பினும், இந்த சம்பவம் குறித்து இதுவரை மலேசிய விமான போக்குவரத்து நிறுவனத்தின் குடிநுழைவு பிரிவு அதிகாரிகள் விளக்கங்கள் எதனைவும் இதுவரை வழங்கவில்லை.


