துணைப் பிரதமர் சாஹிட் ஹமிடி மீதான DNAA முடிவு சட்டவிதிகளுக்கு உட்படுத்தி எடுக்கப்பட்டது- தேசிய சட்டத்துறை அலுவலகம் தகவல்

23 டிசம்பர் 2025, 3:34 AM
துணைப் பிரதமர் சாஹிட் ஹமிடி மீதான DNAA முடிவு சட்டவிதிகளுக்கு உட்படுத்தி எடுக்கப்பட்டது- தேசிய சட்டத்துறை அலுவலகம் தகவல்

புத்ராஜெயா, டிச 23- நாட்டின் துணைப்பிரதமர் டத்தோஶ்ரீ டாக்டர் அஹ்மட் ஸாஹிட் ஹமிடியை உட்படுத்திய அகல்பூடி அறவாரிய ஊழல் வழக்கில், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு குற்றச்சாட்டிலிருந்து விடுதலையற்ற விடுவிப்பு  (DNAA) கோரும் முடிவு சட்ட விதிகளுக்கு இணங்க எடுக்கப்பட்டது என்று தேசிய சட்டத்துறை அலுவலகம் (AGC) தெரிவித்துள்ளது.

அந்த நேரத்தில் நிலவிய சூழ்நிலைகள், மேல் விசாரணை மேற்கொள்ள வேண்டிய அவசியம் உட்பட, ஆகியவற்றின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப் பட்டதாக AGC குறிப்பிட்டது.

"இந்த விவகாரம் தற்போது நீதிமன்றத்தின் பரிசீலணையில் இருப்பதால், விண்ணப்பத்தின் தகுதி குறித்து இந்தத் துறை மேலதிக அறிக்கைகளை வெளியிடாது," என்று அது தனது அறிக்கையில் தெரிவித்தது.

2023 இல் ஷாஹிட் மீதான DNAA ஐத் தொடர்ந்து அதிகாரிகளின் விசாரணை குறித்து 2024 இல் ஒரு வழக்கறிஞர் நீதித்துறை மறுஆய்வு நடவடிக்கைகளை தொடங்க அனுமதி கோரி விண்ணப்பம் தாக்கல் செய்துள்ளார். அதற்கு பதிலளிக்கும் விதமாக இந்த அறிக்கை வெளியிடப்பட்டது.

2023 இல், ஷாஹிட் மீதான 47 ஊழல், பண மோசடி மற்றும் நம்பிக்கை மோசடி குற்றச்சாட்டுக்களுக்கு உயர் நீதிமன்றம் DNAA வழங்கியது. ஸாஹிடின் தற்காப்பு குழு குற்றவியல் வழக்குத் தொடரும் தரப்புக்கு சமர்ப்பித்த பிரதிநிதித்துவத்தின் அடிப்படையில் தேசிய சட்டத்துறை அலுவலகம், இந்த  DNAA ஐக் கோரினார்.

அதில் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம்  இன்னும் வழக்கின் முன்னேற்றத்தை விசாரித்து வருவதாக கூறப்பட்டது.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.