ஜொகூர் பாரு, டிசம்பர் 22- மாமன்னர் சுல்தான் இப்ராஹிம், ஐக்கிய அரபு சிற்றரசுக்கு இன்று தொடங்கி டிசம்பர் 24 வரை சிறப்புப் பயணம் மேற்கொண்டுள்ளார்.
ஐக்கிய அரபு சிற்றரசின் அதிபர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யானின் அழைப்பின் பேரில் மேற்கொள்ளப்பட்ட இந்த பயணம், அந்நாட்டுக்கான மாமன்னரின் முதல் அதிகாரப்பூர்வ பயணமாகும்.
மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் சுல்தான் இஸ்கந்தரின் முகநூல் பக்கத்தில் வெளியிடப்பட்ட பதிவில், அரச விமானம் செனாய் அனைத்துலக விமான நிலையத்தின் அரச விமானகதளத்திலிருந்து காலை 9 மணிக்கு புறப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாமன்னரை ஜோகூர் அரசு செயலாளர் டத்தோ அஸ்மான் அப்துல் ரஹ்மான் உட்பட முக்கியப் பிரமுகர்கள் வழியனுப்பி வைத்தனர்.


