கோலாலம்பூர், டிசம்பர் 22: ராப் பாடகர் நமேவீ (Namewee ) போதைப்பொருள் பயன்படுத்தியதாக கூறப்பட்ட குற்றச்சாட்டிலிருந்து இன்று மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டு, குற்றமற்றவர் என அறிவிக்கப்பட்டார்.
உடற்கூறியல் பரிசோதனை முடிவு எதிர்மறையாக இருப்பதாகவும், குற்றச்சாட்டைத் திரும்பப் பெறுவதாகவும் தெரிவித்ததை அடுத்து இந்த முடிவை மாஜிஸ்திரேட் எஸ். அருண்ஜோதி, துணை அரசு வழக்கறிஞர் அம்ரிட்பிரீட் கௌர் ரந்தாவா அறிவித்தார்.
மேலும் நமேவீக்கு RM2,000 பிணைத்தொகையைத் திரும்ப வழங்குமாறும் அருண்ஜோதி உத்தரவிட்டார். முன்னதாக, வழக்கறிஞர் ஜோசுவா டே, உடற்கூறியல் அறிக்கை எதிர்மறையாக இருப்பதால், தனது கட்சிக்காரர் குற்றச்சாட்டிலிருந்து விடுவிக்கப்பட்டு, குற்றமற்றவர் என அறிவிக்கப்பட வேண்டும் என்று வாதிட்டார்.
கடந்த அக்டோபர் 22ஆம் தேதி இரவு 7.15 மணியளவில் டங் வாங்கி மாவட்ட காவல் தலைமையகத்தின் போதைப்பொருள் குற்றப் புலனாய்வுப் பிரிவின் கழிப்பறையில் நமேவீ போதைப்பொருள் பயன்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டது.


