ஷா ஆலம், டிசம்பர் 20 -இரு நாட்களுக்கு முன்பு நடத்திய சோதனையில் 2 இந்தோனேசிய வீட்டு வேலைக்காரிகளை, ஒரு தொழிலதிபர் மற்றும் அவரது மகள்கள் ஊதியம் இல்லா கட்டாய உழைப்பை பெற்று சித்தரவதைக்கும் ஆளானதாக கயாங்கன் ஹைட்ஸ் பகுதியில் உள்ள ஒரு வீட்டிலிருந்து போலீசார் மீட்டனர்.
ஷா ஆலம் போலீஸ் தலைவர் ஏசிபி ராம்சே எம்போல் கூறுகையில், பாதிக்கப் பட்டவர்களின் வாக்கு மூலங்களின்படி, 48 மற்றும் 33 வயது உடைய இரு பெண்களின் மொபைல் போன்கள் பறிக்கப் பட்டன, அதிக நேரம் வேலை செய்ய வற்புறுத்தப் பட்டனர், அடிக்கடி தாக்கப் பட்டனர் , கடந்த இரு மாதங்களாக சம்பளம் வழங்கப் படவில்லை என்றார்
"ஒருவர் இரண்டு ஆண்டுகளாகவும், மற்றொருவர் ஒரு மாதமாகவும் வேலை செய்து வந்தனர்" என்று அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார்.
ராம்சே கூறுகையில், மதியம் சுமார் 2.30 மணியளவில் நடத்திய சோதனையில், வேலைக்காரிகளின் முதலாளிகளான 50 வயது மற்றும் 30 வயது முறையே தொழிலதிபர் மற்றும் அவரது மகளை போலீசார் கைது செய்தனர்.
இரு பெண்களும் நேற்று முதல் டிசம்பர் 21 வரை மூன்று நாட்கள் ரிமாண்டில் வைக்கப் பட்டுள்ளனர் என்றார்.
இந்த வழக்கு, 2007-ஆம் ஆண்டு மனித கடத்தல் மற்றும் புலம்பெயர்ந்தோர் கடத்தல் தடுப்பு சட்டத்தின் (அடிம்ப்சோம்) பிரிவு 13-இன் கீழ் விசாரிக்கப்படுகிறது.
"இந்த வழக்கு தொடர்பாக மேலும் தகவல் உள்ளவர்கள் ஏஎஸ்பி முகமது அனுவார் பின் முகமது அமிலா@ஹாருனை 0192255597 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்" என்று அவர் கூறினார்.


