ஷா ஆலம், டிச 20 - மைடின் நிறுவனம் (MYDIN), அபரோ நிறுவனத்தின் (Abaro) ஆதரவுடன், குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு உதவும் நோக்கில் தனது நிறுவனத்தின் சமூகப் பொறுப்பு (CSR) நடவடிக்கையின் கீழ் ‘ஜெலாஜா ஜெனராசி பிந்தார்’ (Jelajah Generasi Pintar) திட்டத்தை ஏற்பாடு செய்துள்ளது.
இதில் நாடு முழுவதும் உள்ள B40 பிரிவைச் சேர்ந்த 1,000க்கும் மேற்பட்ட மாணவர்களுக்குப் 2026ஆம் ஆண்டுக்கான கல்வி உதவி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, அடுத்த வாரம் நடைபெறும் ‘ஜெலாஜா ஜெனராசி பிந்தார்’ நிகழ்ச்சியில் கலந்து கொள்ள மைடின் அழைப்பு விடுத்துள்ளது.
நிகழ்ச்சி விவரங்கள்:
தேதி: 23 டிசம்பர் 2025 (செவ்வாய்க்கிழமை)
நேரம்: பிற்பகல் 2.15 மணி
இடம்: மைடின் சுபாங் ஜெயா, சிலாங்கூர்
மேலும், இந்நிகழ்ச்சியில், சிலாங்கூர் மாநிலப் பெண்கள் மேம்பாடு மற்றும் சமூக நலன் துறை ஆட்சிக்குழு உறுப்பினர், அன்ஃபால் சாரியும் கலந்து கொள்ள உள்ளார்.
கூடுதல் தகவல்களுக்கு அஷ்ரஃப் ரோஸ்லானை 010-982 2581 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.


