புத்ராஜெயா, டிச 20 - வெளிநாட்டு தொழிலாளர்களை அதிகமாக நம்பியிருப்பதை குறைப்பதற்காக வேலைவாய்ப்பு இல்லாத மலேசியர்களுக்குக் குறிப்பாக இந்தியர்களுக்கு பயிற்சி அளிக்கும், உள்ளூர் வேலைவாய்ப்பை திட்டத்தை மனிதவள அமைச்சு (KESUMA) அறிவித்துள்ளது.
இந்திய உணவகங்கள், முடித்திருத்தும் நிலையங்கள் மற்றும் நகை கடைகளில் நிலவும் தொழிலாளர் பிரச்சனைகளுக்கு தீர்வு காண உள்துறை அமைச்சுடன் இணைந்து பணியாற்றவிருப்பதாக புதிதாக நியமிக்கப்பட்ட மனிதவள அமைச்சர் டத்தோ ஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
மனிதவள மேம்பாட்டுக் கழகம் (HRD Corp) போன்ற நிறுவனங்கள், உள்ளூர் தொழிலாளர்களுக்குப் பயிற்சி அளிக்க தேவையான நிதியையும், திறன்களையும் பெற்றிருக்கின்றன.
அதாவது, திறன் மேம்பாடு வேலை வாய்ப்புகள் மற்றும் பொருளாதார முன்னேற்றத்திற்கு ஒரு பாதையாக அமைத்துள்ளன. இந்நிலையில் இதுபோன்ற உதவிகளை வழங்க அரசாங்கம் சரியான இடத்தில் இருப்பதாகவும் அவர் வலியுறுத்தினார்.
இந்த முயற்சி, உள்ளூர் சமூகத்திற்கு வேலைவாய்ப்பை அதிகரிக்கும் ஒரு முக்கியமான நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது என்றார் ரமணன்.


