தாய்லாந்து, டிச 19 - தற்போது தாய்லாந்தில் நடைபெற்று வரும் 2025 சீ விளையாட்டு போட்டிகளில், ஆடவருக்கான அம்பெய்தும் போட்டியில் மலேசியா தங்கப் பதக்கத்தை வென்றுள்ளது.
இதில் தேசிய ஆடவர் குழு உபசரனை நாடான தாய்லாந்துடன் மோதியது குறிப்பிடத்தக்கது. இதில், 232-228 என்ற நிலையில் மலேசியா தங்கம் வென்றது.
“இந்த வெற்றி, 2021ஆம் ஆண்டு ஹனோயில் நடைபெற்ற போட்டியில் வெள்ளிப் பதக்கம் மட்டுமே பெற்றிருந்த ஏமாற்றத்தை ஈடு செய்தது.
மேலும், இந்தப் போட்டியில் வெண்கலப் பதக்கம், மூன்றாம் இடத்திற்கான ஆட்டத்தில் இந்தோனேசியாவை வீழ்த்திய வியட்நாமுக்கு கிடைத்தது.”
பெர்னாமா


