ஷா ஆலம், டிச19 - மலேசிய வானிலை ஆய்வு மையமான மெட்மலேசியா சிலாங்கூரில் உள்ள ஏழு மாவட்டங்களில் நண்பகல் 12மணி வரை இடியுடன் கூடிய கனமழை பெய்யும்
என்று கணித்துள்ளது.
சபாக் பெர்ணம், கிள்ளன், பெட்டாலிங், கோலா லங்காட், உலு லங்காட் மற்றும் சிப்பாங் ஆகிய மாவட்டங்கள் இதில் அடங்கும்.
மேலும், கோலாலம்பூர் மற்றும் புத்ராஜெயாவிலும் இதே எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பேராக், நெகிரி செம்பிலான், சரவாக், சபா மற்றும் லாபுவானில் பல உள்ள பகுதிகளில் இதே போன்ற வானிலைதான் நிலவும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
இந்த எச்சரிக்கை ஒரு குறுகிய கால எச்சரிக்கையாகும்.
பொதுமக்கள் www.met.gov.my அதிகாரப்பூர்வ மெட்மலேசியா வலைத்தளம் மற்றும் அதன் சமூக ஊடகங்களைப் பின்பற்றுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது.
சமீபத்திய மற்றும் மிகவும் துல்லியமான தகவல்களைப் பெற myCuaca செயலியைப் பதிவிறக்கம் செய்யுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள்.


