ஷா ஆலம், டிச 19 - சைபர்ஜெயாவில் உள்ள பெர்சியாரன் பிஸ்தாரி மற்றும் ஜாலான் ஃபானா 1 ஆகிய பகுதிகளில் சட்டவிரோதமாக நிறுத்தப்பட்டிருந்த எட்டு வாகனங்களை, அண்மையில் மேற்கொள்ளப்பட்ட அமலாக்க நடவடிக்கையின் போது சிப்பாங் நகராட்சி மன்றம் அகற்றியது.
சைபர்ஜெயா இழுவைப் பிரிவு மேற்கொண்ட இந்த நடவடிக்கை, பொது இடங்களில் ஏற்படும் சட்டவிரோத வாகன நிறுத்தம் மற்றும் போக்குவரத்து இடையூறுகளை கட்டுப்படுத்தும் நோக்கில் நடைமுறைப்படுத்தப்பட்டது என சிப்பாங் நகராட்சி மன்றம் அதன் முகநூல் பக்கத்தில் வெளியிட்ட அறிவிப்பில் தெரிவித்துள்ளது.
இந்த அமலாக்க நடவடிக்கை, 2005ஆம் ஆண்டு சிப்பாங் நகராட்சி மன்ற வீடமைப்பு துணைச் சட்டப் பிரிவு 8(1)ஐ மீறி, பொது இடங்களில் வாகனங்களை நிறுத்திய குற்றத்திற்காக மேற்கொள்ளப்பட்டது,” என்று நகராட்சி மன்றம் விளக்கியது.
மேலும், வாகனத்தை நிறுத்தும் விதிமுறைகளை பின்பற்றத் தவறுபவர்களுக்கு எதிராக தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சிப்பாங் நகராட்சி மன்றம் வலியுறுத்தியது.
போக்குவரத்து சீராக நடைபெறவும் மற்றும் பாதுகாப்பான நகர சூழலை உருவாக்கவும், பொதுமக்கள் வாகனம் நிறுத்தும் விதிமுறைகளை எப்போதும் கடைப்பிடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.


