கோலாலம்பூர், டிச 19 - புதிய அமைச்சரவை நியமனங்கள் தொடர்பாக எந்தப் பிரச்சனையும் எழவில்லை, ஏனெனில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அமைச்சரவை உறுப்பினர்களின் பணிகளைத் தொடர்ந்து கண்காணித்து, தேவைப்பட்டால் ஆலோசனைகளையும் வழிகாட்டுதல்களையும் வழங்கி வருகிறார்.
புதிய அமைச்சரவை நியமனங்கள் தொடர்பாக சில தனிநபர்கள் மீது எழுந்த விமர்சனங்கள் மற்றும் தாக்குதல்களைத் தொடர்ந்து சமூகத்தில் ஏற்பட்ட தவறான புரிதலைத் தணிக்கும் நோக்கில் இந்த விளக்கம் அளிக்கப்படுவதாகத் தகவல் தொடர்பு அமைச்சர் டத்தோ ஃபஹ்மி ஃபட்சில் தெரிவித்தார்.
"பிரதமர் துறையின் (JPM) கீழ் உள்ள அனைத்து அமைச்சர்களுக்கும் பிரதமர் தான் தலைவர். எனவே, அந்த இலாகா தொடர்பான எந்தவொரு நடவடிக்கையும் முடிவும் பிரதமரிடம் குறிப்பிடப்படும்.
"பிரதமர் துறையின் அமைச்சர்கள் வழக்கம்போல் அமைச்சரவைக்குப் பிந்தைய கூட்டங்களிலும் கலந்துகொள்வார்கள்," என்று அவர் அங்கசாபுரி கோத்தா மீடியாவில் நடைபெற்ற வாராந்திர செய்தியாளர் சந்திப்பில் கூறினார்.


