கோலாலம்பூர், டிச 19 - இதுவரை மாதாந்திர அடிப்படையிலான சாரா உதவியை 5.6 மில்லியன் பேர் பெற்றுள்ளதாகப் பதிவாகியுள்ளது. 2025 ஆம் ஆண்டிற்கான மொத்த தகுதி தொகை RM5 பில்லியனை எட்டும் என இரண்டாவது நிதியமைச்சர், டத்தோஸ்ரீ அமீர் ஹம்சா அசிசான் கூறினார்.
“டிசம்பர் 17 2025 வரை, புதிதாக அங்கீகரிக்கப்பட்ட மேல்முறையீடுகள் உட்பட, சுமார் 5.6 மில்லியன் சாரா பெறுநர்கள் பதிவு செய்யப்பட்ட கடைகளில் அத்தியாவசிய பொருட்களை வாங்க மைகார்ட்டை பயன்படுத்தியுள்ளனர். இது 99 சதவீதப் பயன்பாட்டு விகிதத்தையும், மொத்தமாக RM4.59 பில்லியன் செலவினத்தையும் பிரதிபலிக்கிறது,” என்று அவர் தெரிவித்தார்.
'மேலும், ஒரு முறை 'மட்டுமே வழங்கப்பட்ட சாரா உதவித் தொகையை 22 மில்லியனுக்கும் அதிகமான பெரியோர்களில் 20 மில்லியனுக்கும் கூடுதலான பெறுநர்கள் 1.91 பில்லியன் ரிங்கிட்டிற்கும் மேலாக செலவிட்டுள்ளனர் என மேலவையில் வாய்மொழி கேள்வி பதில் அமர்வின் போது அமீர் ஹம்சா விளக்கினார்.
“சாரா செயல்படுத்தலின் தற்போதைய செயல்திறனை அடிப்படையாகக் கொண்டால், ஒரு நிமிடத்திற்கு நடைபெறும் பரிவர்த்தனைகள் முன்பு 2,700ஆக இருந்த நிலையில் தற்போது 7,000ஆக உயர்ந்துள்ளன. 2025 இறுதியில் செயல்திறன் அமைப்பில் மேற்கொள்ளப்படும் மேம்பாடுகளுக்குப் பிறகு, இந்த எண்ணிக்கை ஒரு நிமிடத்திற்கு 10,000 பரிவர்த்தனைகளை எட்டும்.
தற்போது, அமைப்பின் நிலைத்தன்மையும் பெறுநர்கள் மேற்கொள்ளும் கொள்முதல்களையும் கருத்தில் கொண்டு, ஒரு நிமிடத்திற்கு சராசரியாக 1,000 பரிவர்த்தனைகள் நடைபெறுகின்றன,” என்று அவர் கூறினார்.
சாரா உதவிக்காக மைகார்ட் தவறாகப் பயன்படுத்துவது தொடர்பான தொழில்நுட்ப சிக்கல்கள் இல்லாமல் இலக்கு மானியங்களை செயல்படுத்துவதை உறுதி செய்வதில் நிதி அமைச்சின் நீண்டகால நடவடிக்கைகள் குறித்து செனட்டர் முகமட் ஹஸ்பி மூடாவின் கேள்விக்கு அமீர் ஹம்சா இவ்வாறு பதிலளித்தார்.


