குவாந்தான், டிச 18: இன்று காலை தாமான் ஸ்ரீ இந்திரபுராவில் வெள்ளத்தில் மூழ்கிய வீட்டின் நிலையைப் பார்க்க சென்ற பெனோர் சிறைச்சாலை வார்டன் இறந்து காணப்பட்டார். 26 வயதான முகமட் ஹரிரி கமாருடின், இன்று அதிகாலை 1 மணியளவில் ஓர் அடி ஆழத்தில் தண்ணீர் நிரம்பியிருந்த தனது வீட்டின் நிலையைப் பார்க்க தனியாக வெளியே சென்றதாகக் குவாந்தான் மாவட்டக் காவல்துறை தலைவர் ஏசிபி அஷாரி அபு சமா கூறினார்.
இன்று காலை 10 மணி வரை முகமட் ஹரிரி திரும்பவில்லை என்பதைக் கண்டறிந்த பின்னர், அவரது தந்தை பாதிக்கப்பட்டவரைத் தொடர்பு கொண்டதாக அஷாரி கூறினார். பின்னர், மகனைத் தேடி வீட்டிற்குச் சென்ற தந்தை தண்ணீரால் நிரப்பப்பட்ட அறையில் மகன் முகக் குப்புறக் கிடப்பதைக் கண்டார்.
பொதுமக்களின் உதவியுடன் முகமட் ஹரிரியைப் பிபிஎஸ்ஸுக்கு அழைத்து வந்ததாகத் தெரிவிக்கப்பட்டது. பின்னர், உடல் பிரேதப் பரிசோதனைக்காக தெங்கு அம்புவான் அப்சான் மருத்துவமனைக்கு (HTAA) கொண்டு செல்லப்பட்டதாக அஷாரி கூறினார். இந்த வழக்கு திடீர் மரணம் என வகைப்படுத்தப்பட்டுள்ளது.


