பத்துகேவ்ஸ் இந்தியன் செட்டில்மெண்ட் முறையான கிராம மேம்பாட்டை வழங்க மாநில அரசாங்கம் தீவிர முயற்சி- டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி தகவல்

18 டிசம்பர் 2025, 3:21 PM
பத்துகேவ்ஸ் இந்தியன் செட்டில்மெண்ட் முறையான கிராம மேம்பாட்டை வழங்க மாநில அரசாங்கம் தீவிர முயற்சி- டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி தகவல்

ஷா ஆலாம், டிச 18- பத்துகேவ்ஸ் இந்தியன் செட்டில்மெண்ட் முறையான கிராம மேம்பாடுகளுடன் மேம்படுத்துவதை உறுதி படுத்த சிலாங்கூர் மாநில அரசாங்கம் தீவிரம் காட்டி வருகிறது.

இந்த மேம்பாட்டு திட்டம் அடுத்தாண்டு தைப்பூச திருவிழாவிற்குப் பிறகு மேற்கொள்ளப்படும் என்று மாநில மந்திரி புசார் மாண்புமிகு டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

இந்தியன் செட்டில்மென்ட் கிராமப் பகுதி மிகவும் ஒழுங்கமைக்கப்பட்ட முறையில் மேம்படுத்தப்பட வேண்டும், ஏனெனில் குடியிருப்பாளர்களால் கட்டப்பட்ட சில வீடுகள் சாலை ஒதுக்கீட்டில் அமைந்துள்ளன.

மேலும், 123 லோட் நிலப் பிரிவுகளில், சில வீடுகள் நிலப் பட்டாவில் குறிப்பிடப்பட்டுள்ள எல்லைக்கு வெளியில், மற்ற கட்டமைப்புகளுக்கு இடையூறாக உள்ளது்.

இந்த நிலைமை தலையீடு இல்லாமல் விடப்பட்டால், முறையான அகலத்துடன் சாலைகள் அமையவும், நிலத்தை விற்கும்போது உரிமை மாற்றம் தொடர்பான சிக்கல்களுடன், மழைநீர் தேங்குவதைத் தடுக்க அடிப்படை வடிகால் அமைப்பு இல்லாமல் தொடர்ந்து வெள்ளம் ஏற்படுதல் போன்ற பல பிரச்சினைகள் எழும் என்று அவர் குறிப்பிட்டார்.

அடிப்படையில், காலி செய்யப்பட வேண்டிய 44 வீடுகளைச் சேர்ந்த குடியிருப்பாளர்கள் 2.5 கி.மீ நீளமுள்ள சாலை மேம்பாட்டுக்கு ஒப்புக்கொண்டனர்.

தீர்க்கப்பட வேண்டிய விஷயங்களில், குடியிருப்பாளர்கள் இடத்தை காலி செய்த பிறகு மேம்பாட்டு காலத்தில் பாதிக்கப்பட்ட குடியிருப்பாளர்களுக்கான வாடகை செயல்முறை மற்றும் நிலப் பட்டா உரிமையுடன் பொருந்தக்கூடிய வீடுகளை மீண்டும் கட்டுதல் ஆகியவை அடங்கும்.

சாலை, வடிகால், மற்றும் வெள்ளத் தடுப்பு முயற்சிகளை அமைக்கும் காலத்தில் வாடகைச் செலவின் சுமையைக் குறைக்க இந்த 44 குடும்பங்களுக்கும் மாநில அரசு உதவி வழங்கும்.

கூடுதலாக, கோம்பாக் மாவட்ட அலுவலகம், கூட்டரசு அரசாங்கத்திற்குச் சொந்தமான Syarikat Perumahan Negara Berhad நிறுவனத்துடன், குடியிருப்பாளர்களுக்குக் கட்டுப்படியாகக்கூடிய செலவு மற்றும் கட்டண முறையுடன் மிகவும் வசதியான வீடுகளை மீண்டும் கட்டுவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது என்று டத்தோஸ்ரீ அமிருடின் கூறினார்.

கோம்பாக் மாவட்ட அலுவலகம் இந்த முழு முயற்சியையும் ஒருங்கிணைக்கும், இதனால் இது குடியிருப்பாளர்களின் நீண்டகால நலன்களுக்காகவும், கோம்பாக்கில் உள்கட்டமபை தரம் உயத்த சிறந்த முறையில் செயல்படுத்தப்படும்.

முன்னதாக, இந்த வாரம் கோம்பாக் மாவட்ட அலுவலகம் உட்பட சம்பந்தப்பட்ட முகவர் நிலையங்கள் மற்றும் இந்தியன் செட்டில்மென்ட் கிராம மக்களுடன் தான் ஒரு கலந்துரையாடல் நடைத்தியதாக சிலாங்கூர் மாநில மந்திரி புசார் அவர்கள் தலைமை தாங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.