கோலாலம்பூர், டிச 10 – தெக்குன் நேஷனல் (TEKUN Nasional) நிறுவனத்தின் கீழ் பூமிபுத்ரா நிதி ஒதுக்கீடு இந்த ஆண்டு RM300 மில்லியனில் இருந்து 2026ஆம் ஆண்டில் RM500 மில்லியனாக அதிகரிக்கப்படும் என்று தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் கூட்டுறவு அமைச்சர் ஸ்டீவன் சிம் தெரிவித்தார்.
இது அனைத்து இனங்களையும் உள்ளடக்கிய நுண், சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் (PMKS) மற்றும் கூட்டுறவுகளை மேம்படுத்துவதற்கான ஒரு கொள்கை என்று அவர் கூறினார்.
"இந்திய சமூக தொழில்முனைவோர் நிதித் திட்டத்தின் (SPUMI) கீழ் இந்திய தொழில்முனைவோருக்கான நிதி 2026ஆம் ஆண்டில் RM30 மில்லியனில் இருந்து RM50 மில்லியனாக அதிகரிக்கப்படும்.
அதே நேரத்தில், சீன சமூகத்திற்கான RM50 மில்லியன் மதிப்பிலான புதிய PMKS நிதித் திட்டம் 2026 ஜனவரியில் தொடங்கப்படும்," என்று அவர் தெரிவித்தார்.


