ஷா ஆலம், டிச 18 - கடந்த வாரம் கிளந்தான், பாசிர் மாஸில், காரில் பெண் ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படும் 30 வயது மதிப்புத்தக்க காவல்துறை அதிகாரி மீது விசாரணை நடைபெற்று வருகிறது
கிளந்தான் காவல்துறைத் தலைவர் டத்தோ முகமட் யூசோஃப் மாமட் இந்த சம்பவத்தை உறுதிப்படுத்தினார். இதில் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு 20 வயதாகும் என அவர் கூறினார்.
கடந்த புதன்கிழமை இரவு 9 மணியளவில் போதைப்பொருள் வழக்கு தொடர்பாகக் கைது செய்யப்பட்ட தனது கணவரின் நிலை குறித்த தகவல்களைப் பெற பாதிக்கப்பட்ட பெண் குறிப்பிட்ட காவல்துறை அதிகாரியைத் தொடர்பு கொண்டபோது இந்த சம்பவம் நடந்ததாகக் கூறப்பட்டது.
பாதிக்கப்பட்டவர் ஒரு கைதியின் மனைவி என்றும், தண்டனைச் சட்டப் பிரிவு 354இன் கீழ் வழக்கு விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாகவும் முகமட் யூசோஃப் கூறினார்.


