புத்ராஜெயா, டிச 18 - மலேசிய தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் கூட்டுறவு அமைச்சின் புதிய அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள மாண்புமிகு திரு. ஸ்டீவன் சிம் சீ கியோங் மற்றும் துணை அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள மாண்புமிகு டத்தோ முகமட் பின் அலாமின் ஆகியோர் இன்று காலை 9.00 மணியளவில் அதிகாரப்பூர்வமாகத் தமது பணிகளைத் தொடங்கினர்.
அமைச்சின் தலைமையகத்திற்கு வருகை தந்த அவர்களை, அமைச்சின் தலைமைச் செயலாளர் டத்தோ ஸ்ரீ கைருல் ஜைமி பின் டாவுட் மற்றும் உயர் அதிகாரிகள் உற்சாகமாக வரவேற்றனர். அதனைத் தொடர்ந்து, அமைச்சர்கள் இருவரும் தங்களது வருகையைப் பதிவு செய்யும் 'Clock-In' நிகழ்வில் கலந்துகொண்டனர்.புதிய அமைச்சர்களைத் தலைமைச் செயலாளர் மற்றும் துணைத் தலைமைச் செயலாளர்கள் நேரில் வரவேற்று அழைத்துச் சென்றனர். பணிகளைத் தொடங்குவதற்கு முன்னதாக, அமைச்சின் தற்போதைய செயல்பாடுகள் மற்றும் எதிர்காலத் திட்டங்கள் குறித்து அமைச்சர்களுக்கு விளக்கமளிக்கப்பட்டது.
நாட்டின் தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் கூட்டுறவு இயக்கத்தை வலுப்படுத்துவதற்கான வியூகங்கள் குறித்து தலைமைச் செயலாளர் விரிவான விளக்கத்தை வழங்கினார்.


