கோலாலம்பூர், டிச 18- மலாக்கா டுரியான் துங்கால் பகுதியில் மூன்று பேர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவமானது தண்டனைச் சட்டப்பிரிவு 302-இன் கீழ் மறுவகைப்படுத்த உத்தரவிடப்பட்டது.
இந்த நடவடிக்கை சட்ட விதிகளின்படி விசாரணை நடத்தப்படுவதை உறுதி செய்வதற்காகவே அன்றி, இந்த கட்டத்தில் எந்தவொரு குற்றச் செயலும் நடந்ததாக அர்த்தமல்ல என வலியுறுத்தப்பட்டுள்ளது.
இந்த தகவலைத் தேசிய சட்டத்துறை அலுவலகம் AGC ஓர் அறிக்கையின் வாயிலாக விளக்கமளித்தது.
புக்கிட் அமான் மலேசியக் காவல்துறையின் சிறப்புப் படையால் இந்த வழக்கு தொடர்பான விசாரணை இன்னும் நடைபெற்று வருவதாக சட்டத்துறை அலுவலகம் ஓர் அறிக்கையில் தெரிவித்தது.முன்னதாக, மலாக்கா, டுரியான் துங்காலில் மூன்று ஆண்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தை தண்டனைச் சட்டப்பிரிவு 302 (கொலை) இன் கீழ் மறுவகைப்படுத்த சட்டத்துறை அலுவலகம் உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.


