தென் கொரியா, டிச 18 - நேற்று தென் கொரியாவில் முட்டை உற்பத்தி செய்யும் கோழிப் பண்ணைகளில், பறவை காய்ச்சல் தொடர்பான இரண்டு புதிய வழக்குகள் பதிவு செய்யப்பட்டன என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அதில் ஒரு பண்ணையில் சுமார் நான்கு முறை பறவை காய்ச்சல் ஏற்பட்டு பெருமளவில் பாதிப்பை ஏற்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.
தற்போது தென் கொரியாவில் பதிவான பறவை காய்ச்சலின் மொத்த வழக்குகளின் எண்ணிக்கை 14ஆக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
பாதிக்கப்பட்ட பண்ணைகளில் சிறப்பு தனிமைப்படுத்தல் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நோய் மேலும் பரவாமல் தடுக்க, அந்தப் பகுதிகளுக்குள் நுழையும் வாகனங்கள் மீது கண்காணிப்பு கடுமையாக்கப்பட்டுள்ளது எனவும் தென் கொரிய அரசு தெரிவித்துள்ளது.
இந்த ஆண்டின் இறுதிவரை, நாடு முழுவதும் உள்ள முட்டை உற்பத்தி செய்யும் கோழிப் பண்ணைகளில் முழுமையான ஆய்வுகள் நடத்தப்படும் என்றும் அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.


