ஷா ஆலம், டிச 18 - நேற்று இரவு கிள்ளானில் உள்ள தாமான் செந்தோசாவில் நடந்த கைகலப்பில் 34 வயதான உள்ளூர் ஆடவர் ஒருவர் உயிரிழந்தார்.
இரவில் 11.10 மணியளவில் MERS 999 அவசர அழைப்பின் மூலம் இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் தகவல் பெற்றனர் என சிலாங்கூர் காவல்துறை தலைவர் டத்தோ சாசேலி கஹார் கூறினார்.
அந்த ஆடவர் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளார் என அவர் தெரிவித்தார்.
“இச்சம்பவம் குற்றவியல் சட்டப் பிரிவு 302இன் கீழ் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. மேலும், சம்பவத்திற்கான காரணம் இன்னும் விசாரணையில் உள்ளது,” என அவர் அறிக்கையின் மூலம் தெரிவித்தார்.
இதனையடுத்து, சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் அல்லது தகவல்கள் தெரிந்தவர்கள் விசாரணைக்கு உதவ காவல்துறையினரை அணுகுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
அவர்கள் ஏசிபி முகமட் ஷய்ரிர் சபிடியை 012-6650895 அல்லது கிள்ளான் தெற்கு மாவட்டக் காவல்நிலையத்தின் செயலாளர் அறையை 03-3376 2222 தொடர்பு கொள்ளலாம்.


