இங்கிலாந்து, டிசம்பர் 17- அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டிக்கான நுழைவுச் சீட்டுகளின் விலை குறைக்கப்பட்டிருக்கிறது. முதலில் அதன் விலை கிட்டத்தட்ட 4,000 டாலராக இருந்தது.
அனைத்து ஆட்டங்களுக்கும் 60 டாலருக்கு நுழைவுச் சீட்டுகள் விற்கப்படும் என்றது FIFA. போட்டியில் பங்குபெறும் ஒவ்வோர் அணிக்கும் சுமார் 400 முதல் 750 நுழைவுச் சீட்டுகள் அந்த விலைக்கு விற்கப்படும். அடுத்த ஆண்டு ஜூன் 11 முதல் ஜூலை 19 வரை கனடா, மெக்சிகோ மற்றும் அமெரிக்கா நாடுகளில் நடைபெறும் 2026 உலகக் கோப்பை முன்னிட்டு டிக்கெட் விலைகள் மீதான விமர்சனங்கள் அதிகரித்து வருகின்றன.சென்ற வாரம் நுழைவுச் சீட்டுகளின் விலை அதிகமாக இருந்தது பற்றி உலக அளவில் காற்பந்து ரசிகர்கள் கோபத்தை வெளிப்படுத்தினர்.
மேலும் உலகக் கிண்ண நுழைவுச்சீட்டுகளின் விலை முறையாக நிர்ணயிக்கப்படவில்லை என்றும் அவசரத்தில் முடிவு செய்யப்பட்டதாகவும் ஐரோப்பியக் காற்பந்து விளையாட்டாளர்களின் ஆதரவுக் குழு கண்டனம் தெரிவித்தது


