கோலாலம்பூர், டிச 17- முன்னாள் கூட்டரசு பிரதேச பிரதமர் துறை அமைச்சர் டத்தோஶ்ரீ டாக்டர் சலிஹா முஸ்தபா, நாடு மற்றும் மக்களின் நலனுக்காக தற்போது மற்றும் எதிர்காலத்தில் செயல்படுத்தப்படவுள்ள மடாணி கொள்கைக்கும் சீர்திருத்தக் கொள்கைகளுக்கும் தொடர்ந்து முழு ஆதரவை வழங்குவார்.
முன்னதாக அந்த அமைச்சகத்தை வழிநடத்த அவருக்கு வழங்கப்பட்ட நம்பிக்கைக்காக பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிமுக்கு அவர் தனது நன்றியை தெரிவித்தார்.
மேலும், கூட்டரசுப் பிரதேசப் பொறுப்பை அவர் வழிநடத்திய காலத்தில் வழங்கிய சிறந்த அர்ப்பணிப்பு மற்றும் ஒத்துழைப்புக்காக கூட்டரசுப் பிரதேசத் துறை மற்றும் அதன் முகாமைகளின் அனைத்து ஊழியர்களுக்கும் டாக்டர் சலெஹா தனது நன்றி மற்றும் பாராட்டுகளைத் தெரிவித்தார்.
கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளில், நீண்டகாலமாகத் தீர்க்கப்படாமல் இருந்த பல்வேறு பாரம்பரியப் பிரச்சினைகள் படிப்படியாகக் கையாளப்பட்டன என்றும், நீண்டகாலமாகச் சிறு வியாபாரிகளையும், குறு வணிகர்களையும் ஒடுக்கி வந்த பசார் கார்டல்களை ஒழிப்பதற்கான உறுதியான முயற்சிகளும் இதில் அடங்கும் என்றும் அவர் கூறினார்.
இதற்கிடையில், புதிய பிரதமர் துறை (கூட்டரசுப் பிரதேசங்கள்) அமைச்சராகப் பொறுப்பேற்ற ஹன்னா இயோவுக்கு டாக்டர் சலெஹா வாழ்த்து தெரிவித்தார்.


