கோலாலம்பூர், டிசம்பர் 17 - பொதுமக்களுக்கு வெள்ளம் மற்றும் இடையூறு விளைவிக்கும் அபாயம் உள்ள நீடித்த கனமழை எதிர்பார்க்கப்பட்டதைத் தொடர்ந்து இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மெட்மலேசியா வெளியிட்டுள்ள தொடர் மழை எச்சரிக்கை விவரம்:
அபாய நிலை (அதிக ஆபத்து தொடர் மழை):
- பகாங் (குவாந்தான், பெக்கான், ரோம்பின்)
கடுமையான நிலை (வெள்ளம் மற்றும் இடையூறுக்கான சாத்தியம்):
- பகாங் (ஜெரண்டுட், மாரான், பெரா)
- திரங்கானு (டுங்குன், கெமாமான்)
- ஜொகூர் (சிகாமாட், குளுவாங், மெர்சிங், கோத்தா திங்கி)
எச்சரிக்கை நிலை (தொடர் மழை):
- கிளந்தான்
- திரங்கானு (பெசுட், செட்டியு, கோல நெரஸ், உலு திராங்கானு, கோல திராங்கானு, மாராங்)
- பகாங் (கேமரன் மலை, பெந்தோங், தெமர்லோ)
- சிலாங்கூர்
- கோலாலம்பூர்
- புத்ராஜெயா
- நெகிரி செம்பிலான்
- மலாக்கா
- ஜொகூர் (தங்காக், மூவார், பத்து பஹாட், கூலாய், ஜொகூர் பாரு)
மேலும் பொதுமக்கள் விழிப்புடன் இருக்கவும், அதிகாரப்பூர்வ மெட்மலேசியா வலைத்தளம், அதிகாரப்பூர்வ சமூக ஊடகங்கள் அல்லது 1-300-22-1638 என்ற எண்ணில் மெட்மலேசியாவை தொடர்பு கொள்ளவும் சமீபத்திய வானிலை தகவல்களைப் பெறுமாறு அறிவுறுத்துகிறது.


