வாஷிங்டன், டிச 17 - அமெரிக்காவுக்குள் நுழைவதற்கான பயணத் தடைப் பட்டியலில் மேலும் சில நாடுகளை அதிபர் டோனல்ட் ட்ரம்ப் சேர்த்துள்ளார்.
இந்த புதியப் பயணத் தடை எதிர்வரும் ஜனவரி 1 முதல் அமுலுக்கு வரும் என வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது. இதன் மூலம் முழுமையான அல்லது பாதிப் பயணத் தடைக்கு உட்பட்ட நாடுகளின் எண்ணிக்கை 39ஆக உயர்ந்துள்ளது எனபது குறிப்பிடத்தக்கது.
இந்த பயணத் தடைப் பட்டியலில் சிரியா, லாவோஸ், புர்கினா ஃபாசோ (Burkina Faso), மாலி, நைஜர், தென் சூடான் மற்றும் சியாரா லியோன் ஆகிய ஏழு நாடுகள் முழு பயணத் தடைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.
தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில் இம்முடிவு எடுக்கப்பட்டதாக வெள்ளை மாளிக்கை தெரிவித்துள்ளது. குறிப்பாக, சம்பந்தப்பட்ட நாடுகளில் பாதுகாப்பு சோதனை, தகவல் பகிர்வு மற்றும் பயணிகள் சரிபார்ப்பு முறைகள் போதுமானதாக இல்லை என்ற காரணம் முன்வைக்கப்பட்டுள்ளது.
இந்நடவடிக்கைக்கு எதிராக விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில், எல்லை பாதுகாப்பை வலுப்படுத்த இது அவசியம் என அமெரிக்க அரசாங்கம் தெரிவித்துள்ளது.


