ஜோகூர் மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ளப் பேரிடர்; பகாங்கில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உயர்வு

17 டிசம்பர் 2025, 8:56 AM
ஜோகூர் மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ளப் பேரிடர்; பகாங்கில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உயர்வு
ஜோகூர் மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ளப் பேரிடர்; பகாங்கில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உயர்வு
ஜோகூர் மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ளப் பேரிடர்; பகாங்கில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உயர்வு

பெட்டாலிங் ஜெயா, டிச 17- தீபகற்ப மலேசியாவின் தென்பகுதியில் அமைந்துள்ள ஜோகூர் மாநிலத்தில்  வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சமீபத்திய மாநிலமாக மாறியுள்ளது.

மெர்சிங்கில் இன்று காலை ஒரு தற்காலிக வெள்ள நிவாரண மையம் (PPS) திறக்கப்பட்டது.

ஜோகூர்  மாநில பேரிடர் மேலாண்மைக் குழு தலைவர் அஸ்மான் ஷா அப்துல் ரஹ்மான், மெர்சிங்கில் உள்ள SK பூசாட் ஆயர் தாவார் தற்காலிக வெள்ள நிவாரண மையம் (PPS) இன்று காலை 8 மணிக்கு செயல்படத் தொடங்கியது என்றார்.

கம்போங் பாரு ஆயர் தாவார் மற்றும் கம்போங் ஹுபோங் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த 31 குடும்பங்களைச் சேர்ந்த 120 பேர் அங்கு தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்று பெர்னாமா செய்தி வெளியிட்டுள்ளது.

கம்போங் அவாட்டில் உள்ள சுங்கை மூவார் (19.41 மீட்டர்), செகாமட்டில் உள்ள சுங்கை செகாமட் (36.72 மீட்டர்), கம்போங் லபோங்கில் உள்ள சுங்கை மெர்சிங் (1.83 மீட்டர்) மற்றும் தாங்காக்கில் உள்ள சுங்கை மூவார் (2.02 மீட்டர்) ஆகிய நான்கு ஆறுகள் அபாய அளவை எட்டியுள்ளன என்றும் அவர் தெரிவித்தார்.

இதற்கிடையில், பகாங் மாநிலத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இன்று காலை 8.30 மணி நிலவரப்படி, 648 குடும்பங்களைச் சேர்ந்த 2,077 பேர் மூன்று மாவட்டங்களில் உள்ள 18 தற்காலிக நிவாரண மையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

சமூக நலத்துறையின் (JKM) InfoBencana செயலியின்படி, குவாந்தான் அதிக எண்ணிக்கையிலான பாதிக்கப்பட்டவர்களை பதிவு செய்துள்ளது.

அங்கு 13 தற்காலிக நிவாரண மையங்களில் 620 குடும்பங்களைச் சேர்ந்த 1,975 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளனர். அதைத் தொடர்ந்து, மாரானில் 2 தற்காலிக நிவாரண மையங்களில் 19 குடும்பங்களைச் சேர்ந்த 74 பேரும், ரொம்பினில் 3 தற்காலிக நிவாரண மையங்களில் ஒன்பது குடும்பங்களைச் சேர்ந்த 28 பேரும் உள்ளனர்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.