கோலாலம்பூர், டிச 17- மடாணி அரசாங்கத்தின் புதிய அமைச்சரவையின் பதவிப் பிரமாண நிகழ்வு இன்று தலைநகரில் உள்ள இஸ்தானா நெகாராவில் நடைபெறவுள்ளது.
பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம், துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ பாடில்லா யூசோப் மற்றும் டத்தோஶ்ரீ அஹ்மட் ஸாஹிட் ஹமிடி, தலைமைச் செயலாளர் டான் ஸ்ரீ ஷம்சுல் அஸ்ரி அபு பக்கர் ஆகியோர் இந்த அமைச்சர்கள் பதவியேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நேற்று அறிவித்த 2025 அமைச்சரவை மறுசீரமைப்பைத் தொடர்ந்து, ஏழு அமைச்சர் பதவிகளும் எட்டு துணை அமைச்சர் பதவிகளும் மற்றும் இலாகா மாற்றங்கள் இடம்பெற்றன.
சம்பந்தப்பட்ட அனைத்து அமைச்சர்களும் மாட்சிமை தங்கிய மாமன்னர் முன்னிலையில் பதவிப் பிரமாணமும் விசுவாசப் பிரமாணமும் எடுத்துக் கொள்கின்றனர். பின்னர் நியமனப் பத்திரங்களில் கையெழுத்திடவுள்ளனர்.
மடாணி அரசாங்கத்தின் புதிய அமைச்சரவை பதவிப் பிரமாண நிகழ்வு இஸ்தானா நெகாராவில் இன்று நடைபெறுகிறது
17 டிசம்பர் 2025, 6:33 AM


