ஷா ஆலம், டிச 17: நாளை கிள்ளான், பண்டமாரான் ஜெயா இரவு சந்தையில் பிளாட்ஸ் (PLATS) டிஜிட்டல் கூப்பன் விநியோக திட்டத்தின் கீழ், பொதுமக்களுக்கு 300 பிளாட்ஸ் (PLATS) கூப்பன்கள் வழங்கப்படவுள்ளன.
இந்த தகவலை கிள்ளான் அரச நகர மன்றம் (MBDK) தனது முகநூல் பதிவில் தெரிவித்துள்ளது. அதன்படி, RM15 மதிப்புள்ள கூப்பன்களின் விநியோகம் மாலை 5 மணி முதல் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
“நாளை கிள்ளான், பண்டமாரான் ஜெயா இரவு சந்தையில் நடைபெறும் கூப்பன் விநியோக திட்டத்தில் பங்குபெற கிள்ளான் மக்கள் அனைவரும் வருகை தர அழைக்கப்படுகிறார்கள்,” என்று எம்பிடிகே தனது பதிவில் தெரிவித்துள்ளது.
இந்த திட்டம் டிஜிட்டல் பரிவர்த்தனைகளின் பயன்பாட்டை ஊக்குவிப்பதற்கும், அதே நேரத்தில் உள்ளூர் வியாபாரிகளை ஆதரிப்பதற்கும் நடத்தப்படுகிறது.
இந்த நிகழ்வு நடைபெறும் இடத்தில், பொதுமக்கள் பிளாட்ஸின் அதிகாரப்பூர்வ டிக்டோக் கணக்கை பின்தொடர வேண்டும். அதன் பின்னர், அங்கு இருக்கும் பிளாட்ஸ் உறுப்பினர்களைக் கண்டறிந்து கூப்பனைப் பெறலாம்.
மேலும், கூப்பன்கள் குறைந்த அளவில் இருப்பதால், “முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை” என்ற அடிப்படையில் அவை வழங்கப்படும். எனவே, பொதுமக்கள் முன்னதாக வருகை தருமாறு எம்பிடிகே ஊக்குவித்துள்ளது.


