கோலாலம்பூர், டிச 16 - இன்று அமைச்சரவையைப் பற்றிய ஒரு சிறப்பு அறிவிப்பை பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வெளியிட்டிருந்தார்.
அதில் இதுவரை தொழில்முனைவோர் மற்றும் கூட்டுறவு மேம்பாட்டுத் துறை துணை அமைச்சராகப் பதவி வகித்து வந்த டத்தோஸ்ரீ ஆர். ரமணனுக்கு மனிதவள அமைச்சராகப் புதிய பொறுப்பை வழங்கி இருப்பதாகப் பிரதமர் இன்று அறிவித்தார்.

மேலும், சிகாமட் நாடாளுமன்ற உறுப்பினர் யுனேஸ்வரன் ராமராஜ், தேசிய ஒருமைப்பாட்டுத் துறை துணை அமைச்சராகப் பதவியேற்கவுள்ளார்.
இது இந்தியர்களுக்கு நற்செய்தியாக அமைந்துள்ளது என்றால் அது மிகையாகது. இந்த செயல் மடாணி அரசாங்கம் இந்தியர்களுக்கு வழங்கும் முன்னுரிமையை எடுத்துக்காட்டுகிறது.
இந்த அமலாக்கம் நாளை மாமன்னர் முன்னிலையில் சத்தியபிரமாணம் எடுத்து பிறகு நடைமுறைக்கு வரும்.
கூடுதல் தகவல்களுக்கு மீடியா சிலாங்கூர் அகப்பக்கத்தை நாடவும்.


