கீழே விழுந்த கைப்பேசியை எடுக்க முயன்றதால், சாலையில் கார் கட்டுப்பாட்டை இழந்தது

16 டிசம்பர் 2025, 7:19 AM
கீழே விழுந்த கைப்பேசியை எடுக்க முயன்றதால், சாலையில் கார் கட்டுப்பாட்டை இழந்தது

ஷா ஆலம், டிச 16 — நேற்று மாலை, கோல லங்காட், ஜாலான் சுங்கை ரம்பாய் பகுதியில் வாகனம் ஓட்டிக்கொண்டிருந்த போது கீழே விழுந்த கைப்பேசியை எடுக்க முயன்றதால், வியாபாரி ஒருவர் பயணித்த கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையிலிருந்து விலகி விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

பிற்பகல் 3.20 மணியளவில் நடந்த இந்த சம்பவத்தில், உள்ளூர் ஆண் ஒருவர் ஓட்டி சென்ற போர்ஷ் பனாமேரா கார் விபத்துக்குள்ளானதாகக் கோல லாங்காட் மாவட்டக் காவல்துறை தலைவர், மேற்பார்வையாளர் முகமட் அக்மல்ரிசால் ரட்ஸி கூறினார்.

விசாரணை முடிவில், அந்த நபர் ஷா ஆலம் நகரத்திலிருந்து ஜெஞ்சரோமுக்கு பயணித்துக் கொண்டிருந்த போது, கூகுள் மேப்ஸ் செயலியை பயன்படுத்துவதற்காக கைப்பேசியை பயன்படுத்தியதாக தெரியவந்தது.

“அப்போது அந்த கைப்பேசி இருக்கையின் கீழ் விழுந்துள்ளது. அதை எடுக்க முயன்றபோது, வாகனம் இடதுபுறமாக கட்டுப்பாட்டை இழந்துள்ளது” என்று அவர் கூறினார்.

இந்த விபத்தில் ஓட்டுநருக்கு எந்தவிதமான காயங்களும் ஏற்படவில்லை என்றும், அவரிடம் செல்லுபடியாகும் ஓட்டுநர் உரிமம் இருப்பது உறுதி செய்யப்பட்டதாகவும் முகமட் அக்மல்ரிசால் தெரிவித்தார்.

இந்த சம்பவம் தொடர்பான தகவல்கள் உள்ள பொதுமக்கள், இன்ஸ்பெக்டர் மஸ்ரோல் முகமட் டின் அவர்களை 03-3187 2222 அல்லது 011-1853 9115 என்ற தொலைபேசி எண்களில், அல்லது அருகிலுள்ள எந்தவொரு காவல் நிலையத்தையும் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.