திடக்கழிவு மேலாண்மை மற்றும் பொது சுத்திகரிப்பு சட்டம் விரைவில் இறுதி செய்யப்படும்

16 டிசம்பர் 2025, 7:17 AM
திடக்கழிவு மேலாண்மை மற்றும் பொது சுத்திகரிப்பு சட்டம் விரைவில் இறுதி செய்யப்படும்

ஷா ஆலம், டிச 16 - சிலாங்கூரில் தூய்மையை மேம்படுத்த திடக்கழிவு மேலாண்மை மற்றும் பொது சுத்திகரிப்பு சட்டம் 2007 (சட்டம் 672) விரைவில் இறுதி செய்யப்படும் என்று மாநில அரசு நம்புகிறது.

மாநிலம் தழுவிய தூய்மை மேலாண்மை சீர்திருத்தத்தின் ஒரு பகுதியாக இந்த சட்டம் செப்டம்பர் 2026க்குள் இறுதி செய்யப்படும் என்று என ஊராட்சி மன்றம் மற்றும் சுற்றுலாத் துறைக்கான ஆட்சிக்குழு  உறுப்பினர் டத்தோ இங் சுய் லிம் கூறினார்.

“மாநிலம் தழுவிய தூய்மை மற்றும் திடக்கழிவு சேகரிப்பு பணிகளின் முறையான சீரான தன்மை மற்றும் செயல்திறனுக்கு சட்டம் 672ஐ செயல்படுத்துவது முக்கியமானது,” என்று அவர் மீடியா சிலாங்கூரில் தெரிவித்தார்.

மேலும், குறிப்பாக மோசமான வானிலை காலங்களில் கழிவு சேகரிப்பில் ஏற்படும் தடைகளை சமாளிக்க கழிவு-ஆற்றல் (Waste-to-Energy – WTE) வசதிகள் அமைப்பது நீண்டகாலத் தீர்வாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

இந்த நடவடிக்கை சேகரிப்பு நேரத்தையும் மிச்சப்படுத்துகிறது,” என்று அவர் விளக்கினார்.

ஊராட்சி மன்றங்களின் அதிகார வரம்பிற்கு வெளியே உள்ள சில பொதுப் பகுதிகளில் துப்புரவு மேலாண்மையை ஒருங்கிணைக்க பொதுப்பணித் துறையுடன் (JKR) இணைந்து பணியாற்றுவது குறித்தும் மாநில அரசு பரிசீலித்து வருவதாக அவர் மேலும் கூறினார்.

நடவடிக்கைகளை மிகவும் திறம்பட மேற்கொள்ளும் வகையில், சில பகுதிகளின் பராமரிப்பை குறிப்பிட்ட நிறுவனங்களுக்கு ஒப்படைப்பதும், ஒதுக்கீடுகளுடன் வழங்குவதும் திட்டங்களில் அடங்கும்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.