சிட்னி, டிச 16- ஐக்கிய நாடுகள் சபையின் (ஐ.நா) துணை செய்தித் தொடர்பாளர் ஃபர்ஹான் ஹக் (Farhan Haq) கூறுகையில், கிட்டத்தட்ட 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மோசமான துப்பாக்கிச் சூடு சம்பவத்தைத் தொடர்ந்து ஆஸ்திரேலியா துக்கம் அனுசரிக்கத் தொடங்கியுள்ளது.
இந்த சம்பவத்துக்கு ஐ.நா பொது செயலாளர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளதாக அவர் சொன்னார்.
இந்தச் சம்பவத்தில் ஒரு தந்தையும் அவரது மகனும் 15 பேரை சுட்டுக் கொன்றதாக காவல்துறை குற்றம் சாட்டியுள்ளது.
முன்னதாக, காவல்துறை தகவலின்படி, 50 வயதுடைய தாக்குதல்தாரி சம்பவ இடத்திலேயே சுட்டுக் கொல்லப்பட்டார்.
இதனால் மொத்த இறப்பு எண்ணிக்கை 16 ஆக உயர்ந்தது. அதேவேளையில், 24 வயதுடைய அவரது மகன் மருத்துவமனையில் கவலைக்கிடமான நிலையில் உள்ளார்.
ஆரம்பக்கட்ட விசாரணையில், இரு சந்தேக நபர்களும் 10 முதல் 20 நிமிடங்கள் வரை கண்மூடித்தனமாகச் சுட்டதில், ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் உயிரிழந்தனர்.
அப்போது கடற்கரைக்கு வந்திருந்த பொதுமக்கள் சிதறி ஓடினர்.
இந்தச் சம்பவத்தில், இரு காவல்துறை அதிகாரிகள் உட்பட 40 பேர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.
அவர்களின் நிலைமை கவலைக்கிடமாக இருந்தாலும் சீராக உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.


