இந்தியா, டிச 16 - தற்போது இந்தியத் தலைநகர் புதுடெல்லியைப் புகைமூட்டம் சூழ்ந்துள்ளது. இதில் கடந்த இரு தினங்களாகக் காற்றுத் தூய்மை கேட்டின் அளவு மிக மோசமான நிலையை எட்டியுள்ளது என மத்திய அரசாங்கம் தகவல் வெளியிட்டுள்ளது.
மேலும், அங்கு போக்குவரத்தும் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த சூழ்நிலையால் அதிகாரிகள் கடுமையான கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை விதிக்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகியுள்ளனர்.
அதுமட்டுமில்லாமல், காற்றுத் தூய்மைகேடு மோசமடைந்து வரும் வேளையில் 40க்கும் மேற்பட்ட விமான பயணங்கள் ரத்து செய்யப்பட்டதோடு பல விமான பயணங்கள் தாமதமாகியுள்ளன. அதுமட்டுமில்லாமல், புது டெல்லியிலிருந்து வந்து செல்லும் 50க்கும் மேற்பட்ட ரயில் பயணங்கள் பல மணி நேரங்கள் தாமதமானதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த காற்று தூய்மைக்கேடு மக்களுக்கு சுவாசப் பாதிப்பை ஏற்படுத்துவதோடு இதய அல்லது நுரையீரல் நோய்கள் உள்ளவர்களின் உடல்நலத்தைக் கடுமையாகப் பாதிக்கக்கூடும் என்றும் கூறப்படுகிறது.
பெர்னாமா


