கோலாலம்பூர், டிச 15 — மீடியா சிலாங்கூர் நிறுவனம் ஏற்பாடு செய்த சமூக ஊடக உள்ளடக்க தயாரிப்பு மற்றும் படைப்பாற்றல் எழுத்து பயிற்சி பட்டறை, ஊராட்சி மன்றங்களின் டிஜிட்டல் தளங்கள் வழியாக பொதுமக்களுக்கு தகவல் வழங்கும் தரத்தையும் தொடர்பாடலையும் மேம்படுத்த உதவும் எனக் கருதப்படுகிறது.
சமூக ஊடகங்கள் இப்போது ஒரு முக்கிய தளமாக மாறிவிட்ட நிலையில் தகவல்கள் மிகவும் திறம்பட வழங்கப்படுவதையும் சமூகத்தால் நம்பப்படுவதையும் உறுதிசெய்ய அவற்றை முழுமையாகப் பயன்படுத்தப்பட வேண்டும் என்றும் மீடியா சிலாங்கூரின் மூத்த ஆசிரியர் கைருல்னிசாம் பக்கேரி கூறினார்.
மீடியா சிலாங்கூர் ஏற்பாடு செய்த இந்தப் பயிற்சி பட்டறையில் கலந்து கொள்ளும் முதல் ஊராட்சி மன்றமாக உலு சிலாங்கூர் நகராண்மை கழகம் திகழ்கிறது.
மீடியா சிலாங்கூரின் பரந்த அனுபவமும், பல்வேறு பங்குதாரர்களுடனான மூலோபாய உறவுகளும், குறிப்பாக சமூக ஊடக மீதான பொதுமக்களின் பார்வை மற்றும் நம்பிக்கையை நிர்வகிப்பதில், பங்கேற்பாளர்களுக்கு புரிதலை வழங்கும் கூடுதல் பலமாக அமைகின்றன,” என அவர் தெரிவித்தார்.
ஸ்ரீ பசிபிக் ஹோட்டலில் நடைபெற்ற சமூக ஊடக உள்ளடக்க தயாரிப்பு மற்றும் படைப்பாற்றல் எழுத்து பயிற்சி பட்டறையில் அவர் இதனை கூறினார்.
இந்தப் பயிற்சி பட்டறையின் நோக்கம் ஊழியர்களின் ஊடக மேலாண்மை திறன்களை மேம்படுத்துவதும், குறிப்பாக செயற்கை நுண்ணறிவு (AI) போன்ற புதிய தொழில்நுட்பங்களின் பயன்பாட்டை வலுப்படுத்துவதுமாகும் என்று உலு சிலாங்கூர் நகராண்மை கழகத்தின் கார்ப்பரேட் பிரிவு தலைவர் ஜுனைனா அப்துல்லா தெரிவித்தார்.
மீடியா சிலாங்கூரின் நிபுணத்துவம், உலு சிலாங்கூர் நகராண்மை கழகத்தின் சேவைத் தரத்தை உயர்த்துவதோடு, இங்குள்ள குடியிருப்பவர்களுக்கு சிறந்த பயன்களை வழங்க உதவும் என நம்புவதாக,” அவர் விளக்கினார்.
இரண்டு நாட்கள் நடைபெறும் இந்தப் பயிற்சி பட்டறையில் எழுதும் நுட்பங்கள் மற்றும் சமூக ஊடக உள்ளடக்கங்களை மேலும் மூலோபாயமாகப், படைப்பாற்றலுடன் மற்றும் தொடர்புடையதாக உருவாக்குவது குறித்து கவனம் செலுத்தப்படுகிறது. இதன் மூலம் தகவல் பரிமாற்றத்தின் செயல்திறனும் அமைப்பின் மதிப்புப் மேம்படும் என தெரிவிக்கப்பட்டது.


