ஷா ஆலம், டிச 15: சீனப் புத்தாண்டு ஜோம் ஷோப்பிங் வவுச்சருக்கு விண்ணப்பிக்க ஶ்ரீ கெம்பாங்கான் சமூக சேவை மையம் அதன் குடியிருப்பாளர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது.
இந்த வவுச்சர்கள் SMUE அல்லது SMIS திட்டம் உறுப்பினர்கள் அல்லாதவர்களுக்கும், மாதாந்திர குடும்ப வருமானம் RM3,000க்கு குறைவானவர்களுக்கும் (தனிநபர்கள் RM2,000க்கு குறைவானவர்களுக்கு) வழங்கப்படும்.
“வவுச்சர்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதால், முதலில் வரும் நபர்களுக்கே வாய்ப்பு வழங்கப்படும். தகுதி உள்ளவர்கள் விண்ணப்பப் படிவத்தைப் பெற சமூக சேவை மையத்திற்கு வரலாம்.
“ஒவ்வொரு நபருக்கும் ஒரு விண்ணப்பப் படிவம் மட்டுமே வழங்கப்படும். செயல்முறையை எளிதாக்குவதற்காக, முழுமையாக நிரப்பப்பட்ட படிவத்தையும் தேவையான ஆவணங்களின் நகல்களையும் வழங்கப்பட்ட கால அவகாசத்திற்குள் சமர்ப்பிக்க வேண்டும்,” என முகநூலில் தெரிவிக்கப்பட்டது.


