கோலாலம்பூர், டிச 15 - கிள்ளான் பள்ளத்தாக்கு இரண்டாவது இரட்டை தண்டவாளத் திட்டத்தின் (KVDT2) கீழ் இரயில் தண்டவாளப் புதுப்பித்தல் பணிகளுடன் அதன் சேவையை மேம்படுத்தும் முயற்சிகளின் ஒரு பகுதியாகப் பயண அட்டவணை மாற்றம் அமையும் என கே.டி.எம்.பி அறிவித்துள்ளது.
அடுத்தாண்டு ஜனவரி முதலாம் தேதி தொடங்கி, தஞ்சோங் மாலிம் - கிள்ளான் துறைமுகம் - தஞ்சோங் மாலிம் மற்றும் பூலாவ் செபாங் - பத்து கேவ்ஸ் - பூலாவ் செபாங் ஆகிய வழித்தடங்களுக்கு புதிய பயண அட்டவணையை கே.டி.எம்.பி ரயில் சேவை நிறுவனம் பயன்படுத்தவுள்ளது.
இதன்வழி சீரான இயக்கம் சம்பந்தப்பட்ட வழித்தடங்களில் மேம்படுத்தப்பட்ட சேவை உட்பட பயனர்களுக்கு நிலையான சேவையை வழங்க முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எனவே, சுபாங் ஜெயா - கிள்ளான் துறைமுகத்திற்கும் சம்பந்தப்பட்ட இடைநிலை நிலையங்களுக்கும் செல்லும் பேருந்து சேவையும் நிறுத்தப்படும் என்றும் கே.டி.எம்.பி குறிப்பிட்டது.
காலை மற்றும் மாலையில் உச்சநேர பயணங்களில் தினசரி பயனர்களின் வசதியை உறுதி செய்யும் பொருட்டு கிள்ளான் துறைமுகம் கோலாலம்பூர் வழித்தடம் மற்றும் தஞ்சோங் மாலிம் - கோலாலம்பூர் வழித்தடத்திற்கு ஒவ்வொரு 30 நிமிடத்திற்கும் ரயில் சேவை வழங்கப்படும்.
புதிய கால அட்டவணையை KITS STYLE செயலி அல்லது KTMBஇன் அதிகாரப்பூர்வ வலைத்தளம் வழியாக சரிபார்க்கலாம். கூடுதல் தகவல்களுக்கு KTMBஇன் அதிகாரப்பூர்வ சமூக ஊடகத் தளங்களை நாடலாம் அல்லது 03-9779 1200 என்ற KTMB அழைப்பு மையத்தைத் தொடர்பு கொள்ளலாம்.
-- பெர்னாமா


