ஷா ஆலம், டிசம்பர் 12 — இன்றைய கராத்தே போட்டிகளில் மலேசியா மேலும் பல தங்கப் பதக்கங்களைச் சேர்த்துள்ளது.
ஆண் குமிட்டே 55 கிலோ எடைப் பிரிவில் போட்டியிட்ட தேவேந்திரன் கலியானா சுந்தரம், வியட்நாமைச் சேர்ந்த சூ வான் டக் என்பவரை எதிர்கொண்டார். புள்ளிகளைப் பெற தொடர்ந்து தாக்குதல் நடத்தி, 4-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றார் என ஸ்டேடியம் அஸ்ட்ரோ தகவல் தெரிவித்துள்ளது.
இதந் மூலம் மலேசியா அணிக்காக மேலும் ஒரு தங்கப் பதக்கம் சேர்க்கப்பட்டது.
மேலும் பெண்கள் குமிட்டே 50 கிலோ எடைப் பிரிவில், சி. ஷாமளாராணி மியான்மாரைச் சேர்ந்த ஃப்ளோரன்ஸ் நே சி ஹ்டூனை வீழ்த்தி, நாட்டிற்காக மற்றொரு தங்கப் பதக்கத்தை உறுதிப்படுத்தினார்.
மொத்தத்தில், இதுவரை மலேசியா ஆறு தங்கப் பதக்கங்களை பெற்றுள்ளது.


