சபாக் பெர்ணமில் B40 குடும்பங்களுக்கு 150 உணவுப் பெட்டிகள் வழங்கியது ஆயர் சிலாங்கூர்

12 டிசம்பர் 2025, 8:47 AM
சபாக் பெர்ணமில் B40 குடும்பங்களுக்கு 150 உணவுப் பெட்டிகள் வழங்கியது ஆயர் சிலாங்கூர்

ஷா ஆலம், டிசம்பர் 12: பெங்குருசன் ஆயர் சிலாங்கூர், சபாக் பெர்ணமின் கம்போங் சுங்கை அபோங்கில் உள்ள B40 குடும்பங்களுக்கு நம்பிக்கை திட்டத்தின் கீழ் 150 உணவு உதவிப் பெட்டிகளை விநியோகித்தது

ஒவ்வொரு பெட்டியிலும் அரிசி, சமையல் எண்ணெய், சக்கரை, மாவு மற்றும் பல்வேறு அடிப்படை உலர் உணவு பொருட்களை கொண்டுள்ளது. அது அன்றாடத் தேவைகளுக்கு உதவும் என அந் நிறுவனம் முகநூல் வழி ஒரு அறிக்கையில் அறிவித்துள்ளது. "மொத்தம் 17 ஹைட்ரோ ஹீரோஸ் தன்னார்வலர்களும் திட்டத்தின் சீரான விநியோக செயல்முறை மற்றும் தளவாடங்களுக்கு உதவ களத்தில் இறங்கினர்.

"2020 இல் செயல்படுத்தப்பட்டதிலிருந்து, நம்பிக்கைப் பெட்டி திட்டம் சிலாங்கூர், கோலாலம்பூர் மற்றும் புத்ராஜெயாவைச் சுற்றியுள்ள 8,583 B40 குடும்பங்களுக்கு பயனளித்துள்ளது," என்று ஆயர் சிலாங்கூர் தெரிவித்துள்ளது.

கடந்த நான்கு ஆண்டுகளாக ஏழை சமூகத்திற்கு உதவுவதற்காக ஆயர் சிலாங்கூரின் பெருநிறுவன சமூகப் பொறுப்பின் (CSR) ஒரு பகுதியாக பாக்ஸ் ஆஃப் ஹோப் திட்டம் உள்ளது.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.