கோலாலம்பூர், டிச 12 - இவ்வாண்டுக்கான ``asean globalise education`` விருதை தமிழ்ப்பள்ளி ஆசிரியர் திலாக லட்சுமி பெற்றுள்ளார். அண்மையில் தாய்லாந்து, பேக்காக்கில் நடைபெற்ற asean globalise education awards 2025இல் அவருக்கு இந்த விருது வழங்கி கெளரவிக்கப்பட்டது.
மலாக்கா, அலோர் காஜாவில் உள்ள தெபோங் தோட்டத் தமிழ்ப்பள்ளியில் பணிபுரியும் திலாக லட்சுமி 19 ஆண்டு காலாமாகக் கல்வி துறையில் சேவை ஆற்றி வருகிறார். கற்பிதலின் மேம்பாட்டிற்காக புதுமையின் முறைகளை அறிமுகப்படுத்தி வந்ததற்காகவே இந்த விருது அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.
இந்த சாதனை தமக்கானது மட்டுமல்ல தமது குடும்பம், சக ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோரின் ஊக்கமும் துணையாக அமைந்தது என அவர் தெரிவித்தார். அதோடு அலோர் காஜா கல்வி துறை, மலேசியா கல்வி அமைச்சகத்தின் ஆதரவிற்கு ஆசிரியர் திலாக லட்சும் நன்றி தெரிவித்தார்.
மேலும், ஆசிரியர்கள் புதுமை படைத்தால் மாணவர்கள் கற்று கொள்வதோடு வழிநடத்தும் தலைவர்களாகவும் உருவாகுவார்கள் என அவர் வலியுறுத்தினார். நாட்டிற்கும் சமூகத்திற்கும் பெருமை சேர்த்த ஆசிரியர் திலாக லட்சுமி அவர்களுக்கு மீடியா சிலாங்கூர் சார்பிலும் வாழ்த்துகளைத் தெரிவித்து கொள்கிறோம்.


